/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விழுந்த பனைமரத்தில் மொபட் மோதியதில் வங்கி ஊழியர் சாவு
/
விழுந்த பனைமரத்தில் மொபட் மோதியதில் வங்கி ஊழியர் சாவு
விழுந்த பனைமரத்தில் மொபட் மோதியதில் வங்கி ஊழியர் சாவு
விழுந்த பனைமரத்தில் மொபட் மோதியதில் வங்கி ஊழியர் சாவு
ADDED : அக் 06, 2025 01:13 AM
குமாரபாளையம்,:பலத்த மழையால், பனை மரம் சாலையில் விழுந்து கிடந்ததை கவனிக்காமல் மொபட்டில் சென்ற வங்கி பெண் ஊழியர் விபத்தில் பரிதாபமாக பலியானார்.
ஈரோடு மாவட்டம், ஜம்பையை சேர்ந்தவர் காயத்ரி, 29; தனியார் வங்கி ஊழியர். உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு 'வெஸ்பா' மொபட்டில், நாமக்கல் மாவட்டம் குமரபாளையம் அருகே பாறையூர் பகுதி வழியாக, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சூறாவளியுடன் பெய்த மழையால், பனைமரம் சாலையில் விழுந்து கிடந்தது. இதை கவனிக்காத காயத்ரி, பனை மரம் மீது இரு சக்கர வாகனத்துடன் மோதியதில் தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.