/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
/
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
ADDED : அக் 05, 2025 01:41 AM
ப.வேலுார், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஒடிசா வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
ஒடிசா மாநிலம், ராதா நகரை சேர்ந்தவர் ஆஷாயா கயா. இவரது மகன் ராஜேஷ், 37, சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்பு தேடி, நாமக்கல் பகுதிக்கு வந்தார்.
தற்போது இவர், வேலகவுண்டம்பட்டி அருகே சிங்கிலிப்பட்டியில் சொந்தமாக பேப்பர் அட்டை தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு தனியாக சென்ற சிறுமியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை ராஜேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போக்சோவில் ராஜேஷை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.