/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய மயமாக்கக்கோரி வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
தேசிய மயமாக்கக்கோரி வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:11 AM
நாமக்கல் 'வங்கிகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட கிளை சார்பில், நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள பெடரல் வங்கி முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்
கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இதில், தனியார் வங்கிகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட வேண்டும். தனியார் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கத்தோலிக் சிரியன் வங்கியில் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில், பொதுச்செயலாளர் வேங்கடசுப்பிரமணியன் உள்பட வங்கி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

