/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
/
பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : நவ 12, 2025 01:11 AM
நாமக்கல், நாமக்கல், பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில், இந்தியன் விமன் நெட்வொர்க் அமைப்பு சார்பில், 'எழுச்சிபெறு மற்றும் தயாராகு; எதிர்கால உலகிற்காக உன்னை உருவாக்கிக்கொள்' என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடந்தது. பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார். ஐடியேசன் இன்ஸ்டிடியூட் பார் டேலன்ட் டிரான்ஸ்பார்மேசன் நிறுவனத்தின் முதன்மை டிரான்ஸ்பார்மேசன் அலுவலர் விஜய் சேஷாத்ரி கலந்துகொண்டார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பின், இந்தியன் விமன் நெட்வொர்க் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி, சேல்விழி பாலாஜி மற்றும் சேலம் இணை ஒருங்கிணைப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளஸ் 2 மாணவி ஹேம்சிகா கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
தொடர்ந்து, பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் நடராஜன், சிறப்பு விருந்தினர் விஜய் சேஷாத்ரிக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். பின், விஜய் சேஷாத்ரி பேசினார். பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குனர் சதீஸ் நிறைவுரை ஆற்றினார். மாணவி தர்சினி நன்றி தெரிவித்தார். பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளின் முதல்வர் ரோஹித், தலைமையாசிரியை நிரஞ்சனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

