/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
45,992 மகளிர் குழுவிற்கு ரூ.2,832 கோடி வங்கி கடன் வழங்கல்: அமைச்சர் தகவல்
/
45,992 மகளிர் குழுவிற்கு ரூ.2,832 கோடி வங்கி கடன் வழங்கல்: அமைச்சர் தகவல்
45,992 மகளிர் குழுவிற்கு ரூ.2,832 கோடி வங்கி கடன் வழங்கல்: அமைச்சர் தகவல்
45,992 மகளிர் குழுவிற்கு ரூ.2,832 கோடி வங்கி கடன் வழங்கல்: அமைச்சர் தகவல்
ADDED : ஜூன் 12, 2025 01:38 AM
ராசிபுரம், ''நாமக்கல் மாவட்டத்தில், 2021-22 முதல், இதுவரை, 45,992 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 2,832.47 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.
மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, துணை முதல்வர் உதயநிதி, சென்னை, கலைவாணர் அரங்கில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் உதவி, 2024-25ம் ஆண்டிற்கான மணிமேகலை விருது, மாநில அளவில் நடந்த பன்முக கலாசார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 1,104 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, 77.57 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்கி பேசுகையில், ''நாமக்கல் மாவட்டத்தில், 2021-22 முதல், 45,992 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 2,832.47 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், ''ராசிபுரம் நகராட்சியில், 854.37 கோடி ரூபாய் மதிப்பில், ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்,'' என்றார். ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா, துணை தலைவர் கோமதி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, அட்மா குழு தலைவர்கள் ஜெகநாதன், துரைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.