/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வங்கி நகைக்கடன் பழைய முறையில் வழங்கி சிரமத்தை தவிர்க்க கோரிக்கை
/
வங்கி நகைக்கடன் பழைய முறையில் வழங்கி சிரமத்தை தவிர்க்க கோரிக்கை
வங்கி நகைக்கடன் பழைய முறையில் வழங்கி சிரமத்தை தவிர்க்க கோரிக்கை
வங்கி நகைக்கடன் பழைய முறையில் வழங்கி சிரமத்தை தவிர்க்க கோரிக்கை
ADDED : மே 25, 2025 12:50 AM
மோகனுார், ;கொ.ம.தே.க., மோகனுார் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், அணியாபுரத்தில் நேற்று நடந்தது. அதில், ஐந்து பஞ்.,க்குட்பட்ட, 15 பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர். நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும், திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன் கலந்துகொண்டார். கூட்டத்தில், வங்கியில் வழங்கப்படும் நகை கடனை, பழைய முறையிலேயே வழங்கி, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பயனாளிகளின் சிரமங்களை தவிர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகனுாரில் இருந்து, நாமக்கல் செல்லும் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். மோகனுார் சர்க்கரை ஆலையில், இணை மின் உற்பத்தி திட்டம், பல கோடி ரூபாய் செலவு செய்து பயனற்ற நிலையில் இருப்பதை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
மோகனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை அமைத்து, இப்பகுதி மக்களின் விவசாய வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் மணி, நாமக்கல் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பழனிமலை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பிரேமலதா, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

