/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
/
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : அக் 11, 2025 01:14 AM
குமாரபாளையம்,குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு, நகராட்சி மூலம் காவேரி நகர் பத்ரகாளியம்மன் கோவில் ஆற்றங்கரையிலிருந்து நீரேற்று நிலையம் மூலம் பெறப்பட்ட தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீருக்காக நீர் உறிஞ்சப்படும் இடத்தில், சாயக்கழிவு நீர் கலப்பதாகவும், கோடையில் வறண்டு இருப்பதால் குடிநீர் வினியோகம் தடைபடுகிறது.
இதனால், துாய்மையான குடிநீர் மற்றும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை நிறைவேற்றும் வகையில், நகர்மன்ற தலைவரின் முயற்சியால், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15.50 கோடி மதிப்பீட்டில் புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் புதிதாக நீரேற்று நிலையம் அமைத்து, காவேரி நகர் சுத்திகரிப்பு நிலையம் வரை பைப் லைன் அமைக்கும் பணி; 1.90 கோடி ரூபாயில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வணிக வளாகம் கட்டுதல், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
நகராட்சி தலைவரும், வடக்கு தி.மு.க., நகர பொறுப்பாளருமான விஜய்கண்ணன் தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். நகர்மன்ற துணை தலைவர் வெங்கடேசன், தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், உள்பட பலர் பங்கேற்றனர்.