/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்கக்கோரி இ.பி.எஸ்.,சிடம் விவசாயிகள் கோரிக்கை
/
கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்கக்கோரி இ.பி.எஸ்.,சிடம் விவசாயிகள் கோரிக்கை
கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்கக்கோரி இ.பி.எஸ்.,சிடம் விவசாயிகள் கோரிக்கை
கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்கக்கோரி இ.பி.எஸ்.,சிடம் விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 11, 2025 01:14 AM
பள்ளிப்பாளையம், 'தங்கள் அரசு அமைந்தவுடன், கரும்பு டன்னுக்கு, 4,500 ரூபாய் வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சிடம், கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், அப்பநாய்க்கன்பாளையம், பட்லுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சாகுபடி செய்யும் கரும்புகள் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு செல்கிறது. இந்நிலையில், பாப்பம்பாளையம் கழிவுநீர் பாசன விவசாயி சங்க நிர்வாகி மாரப்பன் தலைமையில், நாமக்கலில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு இதுவரை, 3,500 ரூபாய் வழங்கப்படுகிறது. கரும்பு விவசாயம் செய்வதற்கு சராசரி ஒரு டன்னுக்கு, 2,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. கரும்பு வெட்டு கூலி, 1,000 ரூபாய் ஆகிறது. கரும்பு ஒரு ஏக்கருக்கு, 40 டன்னிற்கு மேல் விளைவித்தால் தான் இந்த, 500 ரூபாய் கிடைக்கும். இல்லாவிட்டால் நஷ்டம் தான் ஏற்படும். தங்கள் அரசு அமைந்தவுடன், 4,500 ரூபாய் வழங்க வேண்டும். மேற்கு மாவட்டம் முழுவதும் தென்னை விவசாயம் அதிகம் உள்ளதால், தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடை மூலம் கொடுக்க பரிசீலிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.