/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'அறியாமை, ஊழல், சர்வாதிகாரம் இவை மக்களாட்சிக்கு எதிரான சக்தி'
/
'அறியாமை, ஊழல், சர்வாதிகாரம் இவை மக்களாட்சிக்கு எதிரான சக்தி'
'அறியாமை, ஊழல், சர்வாதிகாரம் இவை மக்களாட்சிக்கு எதிரான சக்தி'
'அறியாமை, ஊழல், சர்வாதிகாரம் இவை மக்களாட்சிக்கு எதிரான சக்தி'
ADDED : அக் 11, 2025 01:14 AM
நாமக்கல், ''அறியாமை, ஊழல், சர்வாதிகாரம் ஆகியவை மக்களாட்சிக்கு எதிரான சக்திகளாகும்,'' என, தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பேசினார்.
நாமக்கல் சட்ட கல்லுாரியில், முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, மூத்த மாணவர்களின் சார்பில் வரவேற்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் அருண் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட முன்னாள் நுகர்வோர் நீதிபதியும், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினருமான ராமராஜ் பங்கேற்று பேசியதாவது:
ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினையை துாண்டும் எண்ணங்களும், வெறுப்பு பேச்சுகளும், மாணவர்களிடையே இருக்கக் கூடாது. இவற்றை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே சமூக ஒற்றுமையும், தேசத்தின் வளர்ச்சியும் ஏற்படும். சுய முன்னேற்றமும், சமுதாய முன்னேற்றமும் இரண்டு கண்கள் என்பதை அனைத்து மாணவர்களுக்கும் போதிக்க வேண்டும். ஓட்டு, வாக்காளர், தேர்தல் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின், மூன்று சம பரிமாணங்களாகும். வாக்காளர்களின் அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவை மக்களாட்சிக்கு எதிரான சக்தி.
ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்களது கொள்கை, மக்களுக்கு எத்தகைய செயல்திட்டத்தை வழங்க உள்ளது என்பதை, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களது இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம், கொள்கையோ, செயல்திட்டமோ இல்லாத தனி மனிதர்கள் மீதான போதையில் இருந்து மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பிரியா, சுமதி, சுவர்ணலட்சுமி, உடல் கல்வி இயக்குனர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.