/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.பாளையத்தில் தொடர் திருட்டு பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்
/
ப.பாளையத்தில் தொடர் திருட்டு பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்
ப.பாளையத்தில் தொடர் திருட்டு பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்
ப.பாளையத்தில் தொடர் திருட்டு பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்
ADDED : அக் 11, 2025 01:13 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் தொடர் திருட்டு நடந்து வருவதால், பொதுமக்களும், வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர்.
பள்ளிப்பாளையத்தில் ஆவாரங்காடு, காவிரி, தாஜ் நகர், ஆவத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சில மாதங்களாக இரவில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, இரவில் குடியிருப்பு பகுதியில் கும்பல், கும்பலாக டூவீலரில் சுற்றி வருகின்றனர். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த, 27ல், பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., கார்னர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், நகையை திருடி சென்றார். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, நகை திருடிய ஈரோட்டை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தாஜ்நகர் பகுதிக்கு டூவீலரில் ஹெல்மெட் அணிந்தபடி, இரண்டு பேர் வருகின்றனர். அதில் ஒருவர், பூட்டியிருந்த ஜவுளிக்கடையின் ஷட்டரை உடைத்து, கையில் டார்ச்லைட், கம்பியுடன் உள்ளே சென்று பணத்தை திருடிவிட்டு, மீண்டும் டூவீலரில் சென்று விடுகின்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சி பதிவாகி இருந்தது. இது நேற்று காலை முதல் சமுக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து நடக்கும் திருட்டால், பொதுமக்களும், வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர். மர்ம நபர்கள் நடமாட்டத்தை தடுக்க ரோந்து பணியில் போலீசார் கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.