/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.25.70 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பூமி பூஜை
/
ரூ.25.70 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பூமி பூஜை
ADDED : நவ 17, 2025 03:52 AM
ராசிபுரம்: ராசிபுரம், ஆண்டகளூர்கேட் அடுத்த குறுக்கு புரம் ஊராட்சி ஒன்-றியம், சக்தி நகர் பகுதியில் ஒன்றிய பொது நிதியில் மயான சாலையை பலப்படுத்த, 8 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறுக்குபுரம் ஊராட்சி, சக்தி நகர் தெற்கு பகுதியில் சாலையை பலப்படுத்த, 16.90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்ப-ணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
ஒன்றிய கழக செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மத்-திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., அடிக்-கல்நாட்டி பணியை தொடங்கி வைத்தார். அங்கு வந்த பொதுமக்கள், சக்தி நகர் பகுதியில் இரவு நேரங்களில் விஷ பூச்-சிகள் வருவதால் மின் கம்பம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற எம்.பி., சோலர் மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பி.டி.ஓ., பாஸ்கர், மாணவரணி பொறுப்பாளர்கள் சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

