/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தெப்பக்குளம் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை
/
தெப்பக்குளம் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை
ADDED : அக் 11, 2024 07:11 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சீரமைப்பதற்காக பூமி பூஜை நடந்தது.
சேந்தமங்கலத்தில் பழமைவாய்ந்த சோமேஸ்வரர் கோவில் குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக குளம் மாசடைந்திருந்தது. இதையடுத்து, குளத்தில் உள்ள கழிவு நீரை வெளியேற்றும் பணி முடிந்த நிலையில், நேற்று குளத்தை கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம், ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபால் முன்னிலை வகித்தார். பொன்னுசாமி எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தெப்பக்குளத்தை துார் வாரும் பணியை தொடக்கி வைத்தார். டாக்டர் பாலாஜி, கவுன்சிலர்கள் விஜன், நுார்ஜகான், அம்பிகா, விஜயலட்சுமி, பத்மா ஜெயக்குமார், சத்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.