/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஹேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் உயிர்ம -பொருட்களின் பயன்பாடு கருத்தரங்கு

ADDED : பிப் 23, 2024 01:44 AM
மல்லசமுத்திரம்;நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டியில் உள்ள மஹேந்திரா கலை, அறிவியல் கல்லுாரியில், உயிரி தொழில்நுட்பவியலில், உயிர்ம -பொருட்களின் பயன்பாடு குறித்து பன்னாட்டு கருத்தரங்கம், கடந்த, 15ல் தொடங்கி இரண்டு நாள் நடந்தது. கல்லுாரி தாளாளர் பரத்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் வள்ளியம்மாள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், கல்லுாரி முதல்வர் அர்ஜுனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழா மலரை, ஜியோன்பக் தேசிய பல்கலையை சேர்ந்த கமலக்கண்ணன் வெளியிட்டார். பேராசிரியர் கோவர்தனன், உயிர் வாயு உற்பத்தி குறித்து பேசினார். முதல் நாள் நிறைவில், உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைவர் ராஜசேகர், திடக்கழிவு மேலாண்மையில் நுண்ணுயிரிகளின் பங்கு குறித்து பேசினார்.
இரண்டாவது நாள் விழாவில், முனைவர் மோகன்ராஜ், பட்டு வகைகளில் பூச்சியினங்களை கட்டுப்படுத்தும் புரதங்கள் குறித்து பேசினார். முனைவர் பாலசுப்ரமணி, உதவி பேராசிரியர் சவீதா ஆகியோர், தேநீர் உற்பத்தியில் உயிர்ம நானோ துகள்களின் பங்களிப்பு குறித்து பேசினர். இறுதியில், பேராசிரியர் ராதிகா ரஜினிகாந்த் அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கு அறிக்கையை பேராசிரியர் செல்வன்குமார் சமர்ப்பித்தார். ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் நன்றி தெரிவித்தார்.