/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி பா.ஜ.,வினர் கவனம் செலுத்த வேண்டுகோள்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி பா.ஜ.,வினர் கவனம் செலுத்த வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி பா.ஜ.,வினர் கவனம் செலுத்த வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி பா.ஜ.,வினர் கவனம் செலுத்த வேண்டுகோள்
ADDED : அக் 30, 2025 01:58 AM
நாமக்கல், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில், பா.ஜ., தீவிர கவனம் செலுத்தி, உண்மையான வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டசபை தேர்தல், வரும், 2026 மே மாதம் நடக்க உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி, வரும் நவ., 4ல், தொடங்கி டிச., 4 வரை நடக்கிறது என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் வரைவு பட்டியல், டிச., 9ல் வெளியிடப்பட்டு, திருத்தங்கள், ஜன., 8 வரை ஏற்கப்பட்டு, சரிபார்ப்பு பணிகள், டிச., 9 முதல், 2026 ஜன., வரை நடத்தப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், 2026 பிப்., யில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பா.ஜ., நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஓட்டு சாவடியிலும் உள்ள, உண்மையான எந்த வாக்காளர்கள் பெயரும் விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுடன் இணைந்து, ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்கள் யார் என்பதை அடையாளம் காட்ட, நாம் உதவ வேண்டும். இந்த சிறப்பு திருத்த பணியை பயன்படுத்தி, நம் ஆதரவு வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க சிலர் சதி செய்ய கூடும்.
கிராமங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியின் போது, போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி, அப்பாவி கிராம மக்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டால், கிராம மக்களுக்கு நம் தொண்டர்கள் உதவ வேண்டும்.
தேர்தல் வெற்றிக்கு அடிப்படை வாக்காளர் பட்டியலும், அதனை சரியாக கையாளும் பூத் கமிட்டிகளும் தான். அதனால், இந்த வாய்ப்பை நாம் முறையாக பயன்படுத்தி, எந்த வாக்காளர் பெயரும் விடுபடாமலும், யாருடைய பெயரும் நீக்கப்படாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

