/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிட்னி புரோக்கரை கைது செய்யக்கோரி பா.ஜ., புகார்
/
கிட்னி புரோக்கரை கைது செய்யக்கோரி பா.ஜ., புகார்
ADDED : ஜூலை 22, 2025 02:10 AM
பள்ளிப்பாளையம், கிட்னி புரோக்கரை கைது செய்ய வேண்டும் என, பள்ளிப்பாளையம் நகர பா.ஜ.,வினர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடும் இடைத்தரகர்கள் மீதும், அதற்கு உடந்தையாக உள்ள தனியார் மருத்துவமனைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஆனந்தன் மற்றும் சில புரோக்கர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.