sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விசைத்தறி ஜி.எஸ்.டி., தொகை விடுவிக்க பா.ஜ., வலியுறுத்தல்

/

விசைத்தறி ஜி.எஸ்.டி., தொகை விடுவிக்க பா.ஜ., வலியுறுத்தல்

விசைத்தறி ஜி.எஸ்.டி., தொகை விடுவிக்க பா.ஜ., வலியுறுத்தல்

விசைத்தறி ஜி.எஸ்.டி., தொகை விடுவிக்க பா.ஜ., வலியுறுத்தல்


ADDED : டிச 29, 2025 07:23 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பா.ஜ.,வின், நெசவாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதற்கு மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்து, 100 நெசவாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு; 38 பேருக்கு, மத்திய அரசின், இ - பெச்சான் அட்டை; 200 பேருக்கு, மத்திய அரசின் திட்டத்தில் இலவச கண் கண்ணாடிகளை வழங்-கினார்.

தொடர்ந்து, சேலம், அம்மாபேட்டையில், 34 ஏக்-கரில் இயங்கிய கூட்டுறவு நுாற்பாலை, 20 ஆண்-டாக செயல்படவில்லை.அங்கு, 'மினி டெக்ஸ்டைல்' பூங்கா நிறுவி, நெசவு தொழிலுக்கு புத்துயிர் ஊட்டுதல்; விசைத்-தறி நெசவாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி., தொகை, பல ஆண்டாக நிலுவையில் இருப்பதால், அவர்கள் தொடர்ந்து தொழில் செய்வது கேள்விக்குறியாகி வருகிறது.

அதனால் அத்தொகையை உடனே விடுவிக்க, மத்திய நிதியமைச்சர் நடவடிக்கை எடுத்தல்; மத்-திய அரசின் மின்னணு ஜாக்கார்டுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கி, நெசவாளர்களின் தேவையை மத்திய அரசு பூர்த்தி செய்தல் என்-பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.

முன்னதாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படம் திறக்கப்பட்டு, அவரது புகைப்பட கண்காட்சி நடந்-தது.

மாநில செயலர்கள் செல்வம், ஐயப்பராஜ், சுற்-றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மாநகர் தலைவர் சசிகுமார், மண்டல தலைவர் காளிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us