/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அரசு நிதி திட்ட துவக்க விழாவில் மோடி படம் இல்லாததால் பா.ஜ., அதிருப்தி

ADDED : செப் 23, 2024 04:51 AM
நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசின் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ், 50 கோடி ரூபாய்க்கு மேல் மத்-திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
நாமகிரிப்பேட்டை, எலச்சிபா-ளையம், மல்லசமுத்திரம், சேந்தமங்கலம், மோகனுார், புதுச்சத்-திரம், வெண்ணந்துார் உள்ளிட்ட ஒன்றியங்களில், 21 இடங்களில் இத்திட்டத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பிளக்சில், அமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சி நிர்வாகிகள் படம் மட்டுமே இருந்தன. ஆனால், பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அரசு தொடர்பான எவ்வித படங்களும் இல்லை. இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:முள்ளுக்குறிச்சியில் இருந்து தும்பல்பட்டி மற்றும் மூலக்குறிச்-சியில் இருந்து பெரிய கோம்பை சாலையில், 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆளுங்-கட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரத-மரின் சாலை அமைக்கும் திட்டத்தில் பூமி பூஜை பேனர்களில், பிரதமர் மோடி படம் இல்லை. இது சம்பந்தமாக பிரதமர் அலுவ-லகத்துக்கும், தனி செயலர்களுக்கும் புகார் மனுக்கள் அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.