/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் ஜி.ஹெச்.,சை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர்
/
சேந்தமங்கலம் ஜி.ஹெச்.,சை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர்
சேந்தமங்கலம் ஜி.ஹெச்.,சை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர்
சேந்தமங்கலம் ஜி.ஹெச்.,சை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர்
ADDED : நவ 16, 2025 02:29 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள பொம்மசமுத்திரம் பஞ்., ராமநாத-புரம் புதுார் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்-பட்டு வருகிறது.
இங்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் யுனானி மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அந்த மருத்துவ கட்டடத்தில் அனுமதியின்றி அரபி எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தது. மேலும், அதிலிருந்து தமிழில் மொழிபெ-யர்த்து மருத்துவ வழிமுறைகளை தகவல் பலகையில் வைத்துள்-ளதாக கூறப்பட்டிருந்தது. இதையறிந்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த, பா.ஜ.,வினர், நேற்று அந்த சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கி-ருந்த மருத்துவர்களிடம், அரபி மொழியில் உள்ள எழுத்துக்களை அரசு மருத்துவமனையில் எழுத அனுமதி பெறப்பட்டுள்ளதா? என, கேள்வி எழுப்பினர்.
உடனடியாக, அங்கிருந்த மருத்துவர்கள், மருத்துவ பணியா-ளர்கள் மூலம் அவை அகற்றப்படும் என, கூறியதை அடுத்து, பா.ஜ.,வினர் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

