/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுவாமி கும்பிடுவதில் தகராறு சமரசம் செய்த பா.ஜ.,வினர்
/
சுவாமி கும்பிடுவதில் தகராறு சமரசம் செய்த பா.ஜ.,வினர்
சுவாமி கும்பிடுவதில் தகராறு சமரசம் செய்த பா.ஜ.,வினர்
சுவாமி கும்பிடுவதில் தகராறு சமரசம் செய்த பா.ஜ.,வினர்
ADDED : நவ 19, 2025 02:14 AM
ராசிபுரம், ராசிபுரம் அருகே, சுவாமி கும்பிடுவதில்
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறை, பா.ஜ., நிர்வாகிகள் சமரசம் செய்து வைத்தனர்.
ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சியில் கருப்பணார் கோவில் அருகில், பொது இடத்தில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள், 50 ஆண்டுகளாக பதிவைத்து வழிபட்டு வந்தனர். சில ஆண்டு காலமாக பக்கத்து தோட்டத்துக்காரர், இந்த வழிபாட்டு முறையை தடுத்து வந்துள்ளார். நேற்று, பா.ஜ., மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் குமார் தலைமையில், ஒன்றிய பொதுச்செயலாளர் ஏழுமலை மற்றும் ஊர் பொதுமக்கள் ராசிபுரம் தாசில்தார் சசிகுமாரிடம் பழைய ஆதாரங்களை காண்பித்து பேசினர்.
வழிபாட்டு உரிமையை மீட்டுத் தரும்படி வேண்டுகோள் வைத்தனர். இரு தரப்பினரையும் அழைத்து தாசில்தார் முன்னிலையில் சமரசம் பேசினர். ஆதாரங்களை பார்த்த தாசில்தார் மீண்டும் அதே இடத்தில் பதிவைத்து வழிபட்டு கொள்ளும்படி வழிபாட்டு உரிமையை வழங்கினார். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

