/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்: மத்திய முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

ADDED : செப் 13, 2024 06:55 AM
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். உறுப்பினர் சேர்க்கை பணி முகாம் குறித்து, நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''பா.ஜ.,வை மேலும் வலிமைப்படுத்தவும், வருங்காலத்தில் மக்கள் பணியை திறம்பட செய்வதற்கு ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து, பா.ஜ., நீடித்து நிலைத்திருக்கவும், உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. உறுப்பினர் சேர்க்கையை அதற்கான பொறுப்பாளர்கள், முன்னுரிமை கொடுத்து சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்,'' என்றார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், சேலம் கோட்ட நிர்வாகிகள் சிவகாமி பரமசிவம், அண்ணாதுரை, கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.