/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., மறியல் எதிரொலி; உடனடியாக குடிநீர் இணைப்பு
/
பா.ஜ., மறியல் எதிரொலி; உடனடியாக குடிநீர் இணைப்பு
ADDED : மே 03, 2024 07:26 AM
ராசிபுரம் : ராசிபுரம் அருகே குடிநீர் கேட்டு, பா.ஜ., சார்பில் சாலை மறியல் நடந்தது. இதையடுத்து நேற்று உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சி, 3 வது வார்டு பனங்காடு பகுதியில் சில வீடுகளுக்கு ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சில வீடுகளுக்கு, பல முறை குடிநீர் இணைப்பு கேட்டும் வழங்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம், பா.ஜ., சார்பில் குடிநீர் இணைப்பு வழங்க கோரி ஆர்.புதுப்பட்டி பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.ராசிபுரம் பி.டி.ஓ., அருளப்பன், நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரபாவதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் மனு கொடுத்த அனைவருக்கும் குடிநீர் இணைப்பு தருவதாக உறுதியளித்தையடுத்து கலைந்து சென்றனர். இந்நிலையில், குடிநீர் இணைப்பு வழங்கும் பணி உடனடியாக நேற்று தொடங்கப்பட்டது. நேற்று மதியத்திற்குள் தனமணி, செல்வமணி ஆகிய இரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.