/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 07, 2025 12:49 AM
நாமக்கல் : கோவையில் நடந்த, கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாமக்கல்லில், பா.ஜ., கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில மகளிர் அணி செயலர் ராதிகா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் சரவணன், ராஜேஸ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா பேசினார்.
தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், சமீபத்தில் கோவையில் கல்லுாரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக மதுபானம் விற்கும் சந்து கடைகளை மூட வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர்.