/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
/
அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : நவ 07, 2025 12:49 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளிப்பாளையம் மத்திய அரிமா சங்கம் சார்பாக, பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2024-25ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு தொகையும், ஒன்பதாம் வகுப்பில் முதல் ஐந்து இடங்கள் பிடித்த மாணவருக்கு பாராட்டு கேடயமும் வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிப்பாளையம் மத்திய அரிமா சங்க தலைவர் பழனியப்பன், நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரன், உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.