/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் பா.ஜ.,வினர் வெற்றி கொண்டாட்டம்
/
நாமக்கல்லில் பா.ஜ.,வினர் வெற்றி கொண்டாட்டம்
ADDED : நவ 15, 2025 03:19 AM
நாமக்கல்: பீஹார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி, 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்-றதையடுத்து, நாமக்கல்லில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
பீஹார் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. தொடர்ந்து, பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று துவங்கியது. துவக்கம் முதலே, ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. மொத்தம் உள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. அதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.,வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில், பா.ஜ., மூத்த தலைவரான ராவணன் தலைமையில், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., வை சேர்ந்த முல்லைவாணன், விவேக்சண்முகம், இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

