ADDED : நவ 15, 2025 03:18 AM
மோகனுார்:மோகனுார் தாலுகா, வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்-பட்டது.
இதில் பங்கேற்ற, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி பேசியதாவது:
தீய பழக்கங்கள் இல்லாமல், பெற்றோர்களை மதித்து, சமுதாயத்தில் சிறந்த உழைப்பாளர்களாக, தொழில் முனைவோர்களாக மாணவர்கள் திகழ வேண்டும். போதை பழக்கம் இல்லாமலும், கைபேசி தொடர்ந்து பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, மாணவ, மாண-வியருக்கு நல் ஒழுக்கங்களை கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து, குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்-தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், 'ஒவ்வொரு குழந்தைக்கும் - ஒவ்வொரு உரிமைக்கும்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது.கலெக்டர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார். பள்ளியில் துவங்கிய பேரணி, மோகனுார் சாலை, மணிக்-கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் வழியாக சென்று மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன், அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர், சர்வம் கல்வி அறக்கட்டளையினர் பங்கேற்றனர்.

