/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போடி - சென்னை ரயில் இனி நாமக்கல்லில் நிற்கும்
/
போடி - சென்னை ரயில் இனி நாமக்கல்லில் நிற்கும்
ADDED : ஜன 02, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஜன. 2-
சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனுார் எக்ஸ்பிரஸ், திங்கள், புதன், வெள்ளி இரவு, 10:30க்கு புறப்பட்டு காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியே மறுநாள் காலை, 9:35க்கு போடிநாயக்கனுாரை அடையும்.
மறுமார்க்க ரயில், செவ்வாய், வியாழன், ஞாயிறு இரவு, 8:30க்கு கிளம்பி, மறுநாள் காலை, 7:55க்கு சென்னையை அடையும்.
இந்த ரயில்கள், சோதனை அடிப்படையில் நாமக்கல்லில் நின்று செல்ல, ரயில்வே வாரியம் அனுமதித்ததால், நேற்று முதல், அங்கு ஒரு நிமிடம் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

