/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏ.டி.எம்.,ல் கிடந்த ரூ.50,000 போலீசில் ஒப்படைத்த சிறுவன்
/
ஏ.டி.எம்.,ல் கிடந்த ரூ.50,000 போலீசில் ஒப்படைத்த சிறுவன்
ஏ.டி.எம்.,ல் கிடந்த ரூ.50,000 போலீசில் ஒப்படைத்த சிறுவன்
ஏ.டி.எம்.,ல் கிடந்த ரூ.50,000 போலீசில் ஒப்படைத்த சிறுவன்
ADDED : நவ 16, 2025 02:33 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, வளையக்காரனுார் பகுதியை சேர்ந்த தம்பதியர் கார்த்திகேயன், 38, புனிதா, 34; கட்டட தொழிலாளிகள். இவர்களுக்கு ஜினார்த், 13, மதுவர்ஷா, 19, என, இரண்டு குழந்தைகள்.
இருவரும் குமாரபாளையம் அருகே உள்ள சங்கர் சிமென்ட் ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் நால்வரும், குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலையில் உள்ள வட்டமலை பகுதியில் உள்ள ஏ.டி.எம்.,ல், நேற்று இரவு, 7:30 மணிக்கு பணம் எடுக்க சென்றனர்.ஏ.டி.எம்., அறையில் ஜினார்த் மட்டும் சென்று பணம் எடுக்கும் பணியை செய்தார். அப்போது, ஏ.டிஎம்., இயந்திரம் அருகில் ரசீது கிழித்து போட வைக்கப்பட்ட குப்பை தொட்டியில், 50,000 ரூபாய் பண்டல், 'சீல்' உடைக்காமல் இருந்தது பார்த்துள்ளார். அதை, வெளியில் நின்ற தன் தந்தை கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள் குடும்பத்துடன் வந்து, போலீசில் பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட எஸ்.எஸ்.ஐ., மாதேஸ்வரன் இந்த சிறுவனுக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

