/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டுறவு வங்கி மூலம் ரூ.3,739 கோடி கடன் இலக்கு: வங்கி தலைவர் ராஜேஸ்குமார் தகவல்
/
கூட்டுறவு வங்கி மூலம் ரூ.3,739 கோடி கடன் இலக்கு: வங்கி தலைவர் ராஜேஸ்குமார் தகவல்
கூட்டுறவு வங்கி மூலம் ரூ.3,739 கோடி கடன் இலக்கு: வங்கி தலைவர் ராஜேஸ்குமார் தகவல்
கூட்டுறவு வங்கி மூலம் ரூ.3,739 கோடி கடன் இலக்கு: வங்கி தலைவர் ராஜேஸ்குமார் தகவல்
ADDED : நவ 16, 2025 02:32 AM
நாமக்கல்: 'கூட்டுறவு வங்கி மூலம், பயிர் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 51 சதவீதம் இலக்கை அடைந்துள்ளோம்' என, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., கூறினார்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2025 துவக்க விழா நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, உறுதிமொழி வாசித்தார். கூட்டுறவு பணியாளர்கள், கூட்டுறவாளர்கள் ஏற்றுக்கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., கொடி ஏற்றி வைத்து, கூட்டுறவு வாரவிழாவை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
'அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2025', முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, வரும், 20 வரை கொண்டாடப்படுகிறது. சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூட்டுறவு இயக்கம், இங்கிலாந்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டாலும், இன்று உலகம் முழுவதும் பரவி, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு, பொருளாதார முன்னேற்றத்திற்காக அடித்தளம் அமைத்து வருகிறது
நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம், இந்தாண்டு விவசாயம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் பிற கடன்கள் உள்பட, 3,739 கோடி ரூநாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 51 சதவீத இலக்கை அடைந்துள்ளோம். பயிர் கடன் மட்டும், 650 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் முடிவிற்குள், முழு இலக்கை எய்தி விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டுறவு சங்கங்களின் நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் சந்தானம், வங்கி இயக்குனர்கள் நவலடி, ராஜேந்திரன், கூட்டுறவாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

