/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சென்னையில் சட்டப்பாதுகாப்பு போராட்டம் பிராமணர், அர்ச்சகர்கள் பங்கேற்க அழைப்பு

ADDED : நவ 02, 2024 04:39 AM
நாமக்கல்: 'சென்னையில், நாளை நடக்கும் சட்டப்பாதுகாப்பு போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்கம், அர்ச்சகர்கள் சமூக நலச்சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) மாநில தலைவர் திருவொற்றியூர் நாராயணன், தமிழக அர்ச்சகர்கள் சமூக நலச்சங்க மாநில தலைவர் அருணாச்சலம், பொதுச்செயலாளர் பாலசடாட்ஷரம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:பிராமணர்கள் மீதான அவதுாறு பிரசாரம், பொய் பிரசாரம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்; பிராமணர்களின் கவுரவத்தை பாதுகாக்கவும்; இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், நாளை காலை, 10:00 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. மத்திய, மாநில அரசுகளிடம் சட்டப்பாதுகாப்பு கோரி நடக்கும் இப்போராட்டத்தில், மாநிலத்திலுள்ள மாவட்ட அமைப்புகள் கலந்துகொள்ள வேண்டும். இதுகுறித்த விபரங்களை, சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநில அமைப்பு அலுவலகத்தில் தெரிவிக்கவும். பிராமணர்களின் நலனுக்காக, நாளை சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டம், பேரணியில், பிராமணர்கள், அர்ச்சகர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.