/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலை உணவு திட்டம்: நகராட்சி சேர்மன் ஆய்வு
/
காலை உணவு திட்டம்: நகராட்சி சேர்மன் ஆய்வு
ADDED : ஜன 21, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, ராஜாகவுண்டம்பாளையத்தில் நகராட்சி தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, முதல்வரின் காலை உணவு திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என, நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, முதல்வரின் காலை உணவு திட்ட பணிகளையும், பொருட்களின் இருப்பு விபரங்களையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, உணவின் தரத்தை ருசித்து பார்த்தார். தலைமை ஆசி-ரியர் மற்றும் நகராட்சி
கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

