/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்..
/
மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்..
ADDED : நவ 25, 2024 03:09 AM
மோகனுார்: ரோட்டரி சங்கம் சார்பில், மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம், மோகனுாரில் நடந்தது. சங்க தலைவர் ராஜேந்-திரன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெங்கேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுப்ரமணி முகாமை துவக்கி வைத்தார். முகாமில், மருத்துவர் குழுவினர், தரமான நுண்ணிய கருவியை கொண்டு பரிசோதனை செய்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்து பயன்-பெற்றனர்.
இந்தியாவில், இதுவரை, 3 லட்சத்து, 10,000 பெண்கள் புற்று-நோய்க்கு ஆளாகி உள்ளனர். மார்பக புற்று நோய்க்கான சரியான காரணிகளை கண்டறியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்-ளது. ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோய் கண்டறியப்-பட்டால், வாழ்க்கை ஆரோக்கியமாகி விடும். 40 வயதுக்கு மேற்-பட்ட ஒவ்வொரு பெண்களும், மார்பக புற்றுநோய்க்கான பரிசோ-தனை செய்து கொள்வது அவசியம்' என வலியுறுத்தப்பட்டது. ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரி மாணவியர், ரோட்டரி சங்க நிர்-வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.