/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மீண்டும் துவங்கிய செங்கல் தயாரிப்பு பணி
/
மீண்டும் துவங்கிய செங்கல் தயாரிப்பு பணி
ADDED : ஆக 24, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியனில் அலங்காநத்தம், போடிநாய்க்கன்பட்டி, முத்துக்காப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இந்த சூளைகளில், வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் பெய்த சாரல் மழையால் செங்கல் சூளைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, மீண்டும் வெயில் காலம் துவங்கியதால், செங்கல் தயாரிப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.