ADDED : டிச 09, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், 200 கோடி ரூபாயில், பள்ளிப்பாளையம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள், கடந்த, இரண்டு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த மேம்பாலம், ஆலாம்பாளையத்தில் துவங்கி, ஒன்பதாம்படி பகுதி வரை, 3 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்படுகிறது. தற்போது, இறுதி கட்டத்தில் மேம்பாலம் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேம்பாலத்தின் மேலே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்தவுடன், மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், பள்ளிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.