/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
/
குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
ADDED : செப் 20, 2025 11:02 PM
ஆட்டையாம்பட்டி:குட்டையில் குளித்தபோது அண்ணன், தம்பி மூழ்கி உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், மின்னக்கல், வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் சுப்ரமணி, 50; கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தா, 43. இவர்களின் மூத்த மகன் நிஷாந்த், 23; பிளஸ் 2 முடித்து விட்டு, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இளைய மகன் பிரசாந்த், 19, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஆட்டையாம்பட்டி அருகே அரசம்பாளையம் சொரிமலை கரடு அடிவாரத்தில் குட்டை உள்ளது. இரு நாட்களாக பெய்த மழையால், அதில் தண்ணீர் அதிகம் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை, நிஷாந்த், பிரசாந்த், அவர்கள் உறவினர்கள் இருவர், அந்த குட்டையில் குளிக்க சென்றனர்.
சகோதரர்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில், முதலில் இறங்கிய நிஷாந்த் மூழ்கிவிட்டார். இதைப் பார்த்த பிரசாந்த் அவரை காப்பாற்ற முயன்றபோது அவரும் மூழ்கினார். இருவரும் சகதியில் சிக்கி இறந்தனர். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.