/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லட்ச ரூபாய்க்காக அக்காவை கொன்ற தம்பிக்கு 'கம்பி'
/
லட்ச ரூபாய்க்காக அக்காவை கொன்ற தம்பிக்கு 'கம்பி'
ADDED : நவ 03, 2025 12:08 AM
நாமக்கல்: பணத்துக்காக சொந்த சகோதரியை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், காதப்பள்ளி, சேகண்டிபாளையத்தை சேர்ந்தவர் கந்தாயி, 80. கணவரை பிரிந்து தம்பி அழகேசன், 59, பராமரிப்பில் வசித்தார். நேற்று முன்தினம் காலை, கந்தாயி வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார்.
காதப்பள்ளி வி.ஏ.ஓ., புகார்படி, நல்லி பாளையம் போலீசார் விசாரித்தனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அழகேசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தந்தை பழனியப்பனுக்கு சொந்தமான நிலத்தை பாகப்பிரிவினை செய்தபோது, கந்தாயிக்கு, 1 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அழகேசன் மூத்த மகள் ரேவதியின் கணவர் செந்தில்குமாரிடம், காந்தாயி பணத்தை கொடுத்து உள்ளார். அந்த பணத்தை கேட்டு கந்தாயியை அழகேசன் தொந்தரவு செய்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில், நேற்று முன்தினம் காலை துண்டால் கழுத்தை இறுக்கி, அழகேசன் அக்காவை கொலை செய்தது தெரியவந்தது. லாரி மெக்கானிக்கான அழகேசனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

