/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்த மருத்துவமனை கல்லுாரியாக 2 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
/
சித்த மருத்துவமனை கல்லுாரியாக 2 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
சித்த மருத்துவமனை கல்லுாரியாக 2 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
சித்த மருத்துவமனை கல்லுாரியாக 2 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
ADDED : நவ 03, 2025 03:13 AM
நாமக்கல்: ''சித்த மருத்துவமனை, இரண்டு ஆண்டுகளில் கல்லுாரியாக தரம் உயர்த்தப்படும்,'' என, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்-வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.
நாமக்கல் மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனையில், மருத்-துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், 3.34 கோடி ரூபாய் மதிப்பில், 50 ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை உட்பட, மூன்று புதிய பொது சுகாதார அலகுகள், இரண்டு புதிய துணை சுகாதார நிலையங்கள், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்-பட்ட நபர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்-களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். அமைச்சர் மதி-வேந்தன், எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், ஆயுஷ் மருத்துவமனையை திறந்து வைத்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தின் மருத்துவ வளர்ச்சியில், ஒரு புதிய மைல் கல் என்ற வகையில், பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறை-கள்படி, 60 படுக்கைகளுடனான சித்த மருத்துவனை எங்கே செயல்படுகிறதோ, அங்கே சித்த மருத்துவ கல்லுாரி அமைவதற்-கான வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த மருத்துவமனையானது, இரண்டு ஆண்டுகளில் அரசு விதிமுறைப்படி, அரசு சித்த மருத்-துவ கல்லுாரியாக தரம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்-கிறது.
கடந்த, 2024 நிதிநிலை அறிக்கையில் தெரிவித்ததுபோல், ஆறு லட்சம் ரூபாய் செலவில், நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை பராமரிப்பதற்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட வட்டார மருத்துவமனை வளாகத்தில், புற நோயாளிகள் வார்டு உருவாக்கி தருவதற்குரிய நடவடிக்கை மேற்-கொள்ளப்படும்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, 364.74 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் திறந்து வைக்கப்-பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்-கலம், குமாரபாளையம், ப.வேலுார், ராசிபுரம், திருச்செங்கோடு சட்டசபை தொகுதிகளில், 129.75 கோடி ரூபாய் செலவில், 34 மருத்துவ கட்டட பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் சோமசுந்தரம், நாமக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்-மொழி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் புகழேந்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட நல அலு-வலர் பூங்கொடி, உதவி சித்த மருத்துவ அலுவலர் தமிழ்-செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்-பட பலர் பங்கேற்றனர்.

