/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமறைவு குற்றவாளிகள் டிச., 3ல் ஆஜராக உத்தரவு
/
தலைமறைவு குற்றவாளிகள் டிச., 3ல் ஆஜராக உத்தரவு
ADDED : நவ 03, 2025 03:14 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த செங்காளிகவுண்டனுாரை சேர்ந்த முத்துக்குமார் மீது, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில், 2007லும், நாமக்கல் பெரி-யப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள நரிக்குறவர் காலனியை சேர்ந்த மாறன் மீது, 2015லும் அடிதடி வழக்கு பதிவாகி உள்-ளது. இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால், இந்த வழக்கில் முத்துக்குமார், மாறன் இருவரும் நீதி-மன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வரு-கின்றனர். அதனால், நீதிமன்றத்தில் அவர்களை தேடப்படும் குற்-றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், முத்துக்குமார், மாறன் ஆகிய இருவரும், வரும், டிச., 3ல், நீதிமன்றத்தில் ஆஜ-ராக வேண்டும். இல்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்-படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

