/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்விரோதத்தில் கூலிதொழிலாளி குத்திக்கொலை: சகோதரர்கள் கைது
/
முன்விரோதத்தில் கூலிதொழிலாளி குத்திக்கொலை: சகோதரர்கள் கைது
முன்விரோதத்தில் கூலிதொழிலாளி குத்திக்கொலை: சகோதரர்கள் கைது
முன்விரோதத்தில் கூலிதொழிலாளி குத்திக்கொலை: சகோதரர்கள் கைது
ADDED : பிப் 16, 2025 04:02 AM
ப.வேலுார்: முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை குத்திக் கொலை செய்த
சகோதரர்கள், இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், நல்லுார் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 54; கூலித்தொழிலாளி; மனைவி கவிதா 47; இவர் களுக்கும், அதே பகுதியை சேர்ந்த வீரமணி குடும்பத்தா-ருக்கும், முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கந்தம்பாளையத்தில் மது குடித்துக் கொண்டிருந்தபோது வீரமணி மகன் அசோக்-குமார், 32, என்பவருக்கும்,
அண்ணாதுரைக்கும் தகராறு ஏற்பட்டது. பின் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
இரவு, 11:00 மணிக்கு அண்ணாதுரை வீட்டின் முன் கட்டிலில் துாங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அசோக்குமார், சகோதரர் சின்னசாமி, 45, ஆகிய
இருவரும் கட்டிலில் துாங்கிக்கொண்டிருந்த
அண்ணாதுரையை சரமாரியாக தாக்கி,
கத்தியால் நெஞ்சில் குத்தினர். அலறல் சத்தம் கேட்டு வந்த கவிதா, கணவரை காப்பாற்ற முயன்றதில் அவரும் காயம-டைந்தார்.
படுகாயமடைந்த அண்ணாதுரையை மீட்டு, நாமக்கல் அரசு மருத்-துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய நல்லுார் போலீசார், சகோத-ரர்கள் அசோக்குமார், சின்னசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.