/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2024 07:55 AM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பி.எஸ்.என்.எல்., - டி.பி.ஏ., ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் - மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சேந்தமங்கலம் கிளை செயலாளர் முத்து தலைமை வகித்தார். அதில், பி.எஸ்.என்.எல்., ஊழியார்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, 2017 ஜன., 1 முதல் பென்சன் மாற்றம், ஊதிய மாற்றம் வழங்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல்.,லில் 4ஜி, 5ஜி சேவை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் கான்ட்ராக்ட் ஊழியர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதியம், இ.பி.எப்., - இ.எஸ்.ஐ., உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.