/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பவுத்தர்கள் புனித பயணம் மானியம் பெற அழைப்பு
/
பவுத்தர்கள் புனித பயணம் மானியம் பெற அழைப்பு
ADDED : ஆக 01, 2025 01:55 AM
நாமக்கல், பவுத்தர்கள் நாக்பூருக்கு புனித பயணம் மேற்கொள்ள மானியம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டை சேர்ந்த பவுத்தர்கள், நாக்பூர் தீட்சா பூமியில் விஜயதசமியில் நடைபெறும், தர்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர். தமிழ்நாடு அரசால் 2025--26ம் ஆண்டில் புனித பயணம் சென்று திரும்பியவர்களில், நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக, 5,000 ரூபாய் வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பவுத்தர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்ப படிவத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ., 30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை--5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.