/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
/
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஆக 01, 2025 01:55 AM
நாமக்கல், நாமகிரிப்பேட்டை அருகே, மனைவியை சுவற்றில் அடித்து கொலை செய்த கணவருக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுகுறிச்சி ஆலமரத்துமேட்டடை சேர்ந்தவர் ஹரிஹரன், 28. இவரது மனைவி லட்சுமி. இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதுண்டு. கடந்த 2023ம்ஆண்டு கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரிஹரன், லட்சுமியை சுவற்றில் அடித்து கொலை செய்தார்.
இது குறித்து, ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ஹரிஹரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார். அதில், மனைவியை சுவற்றில் அடித்து கொலை செய்த ஹரிஹரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.