/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்சி, துறையூர் செல்லும் பஸ்கள் நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லும்

ADDED : அக் 10, 2025 01:24 AM
நாமக்கல், 'தீபாவளியை முன்னிட்டு, இன்று முதல் வரும், 26 வரை, திருச்சி, துறையூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லும்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல், வரும், 26 வரை, பழைய பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில், பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மாநகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக திருச்சி மற்றும் துறையூர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் கடைவீதி பிரதான சாலை, பழைய சிங்கப்பூர் ஸ்டுடியோ அருகில் உள்ள நுழைவாயில் வழியாக உள் நுழைந்து, பழைய பஸ்
ஸ்டாண்டில் அமைந்துள்ள பாலாஜி ஸ்டுடியோ அருகில் உள்ள வாயில் வழியாக வெளியேறும்.அதனால், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி மற்றும் துறையூர் மார்க்கமாக செல்லும் பயணிகள் அனைவரும், பழைய பஸ் ஸ்டாண்ட் உட்புறம் இருந்தே பஸ்களில் பயணிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.