/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் இ.பி.எஸ்., பிரசாரம் வழிநெடுக வரவேற்பளித்த மக்கள்
/
நாமக்கல்லில் இ.பி.எஸ்., பிரசாரம் வழிநெடுக வரவேற்பளித்த மக்கள்
நாமக்கல்லில் இ.பி.எஸ்., பிரசாரம் வழிநெடுக வரவேற்பளித்த மக்கள்
நாமக்கல்லில் இ.பி.எஸ்., பிரசாரம் வழிநெடுக வரவேற்பளித்த மக்கள்
ADDED : அக் 10, 2025 01:25 AM
நாமக்கல், தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில், நேற்று, நாமக்கல், ப.வேலுார் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். நாமக்கல் நகரில் மக்கள் கூட்டம் கடல்போல் காட்சியளித்தது. 3 கி.மீ., துாரம் மக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து, இ.பி.எஸ்., பேசுகையில், ''நாமக்கல் என்று சொன்னால் முட்டை, லாரி, விசைத்தறி, டெக்ஸ்டைல் கைத்தறி நாலும் பிரதான தொழில். இந்த நான்கு தொழிலும் தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதே படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது,'' என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, விஜயபாஸ்கர், ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், ராஜா, கோபிநாத், ரவிச்சந்திரன், டவுன் பஞ்., செயலாளர் ராஜவடிவேல், ஐ.டி., விங் செயலாளர் முரளி பாலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.