/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுகாதார துறை அதிகாரிகளை சுற்றி வளைத்த வணிகர்கள்
/
சுகாதார துறை அதிகாரிகளை சுற்றி வளைத்த வணிகர்கள்
ADDED : நவ 29, 2025 01:28 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுார் பகுதியில் மளிகை கடை, உணவகம், சலுான் கடை, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சுகாதார துறையினர் மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு துறையினர் என, ஐந்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதித்து வசூல் செய்தனர். 200 முதல் 1,000 ரூபாய் வரை அடாவடியாக வசூலில் ஈடுபட்டதாக
கூறப்படுகிறது.இதனால், சந்தேகமடைந்த பொதுமக்கள், போலி அதிகாரிகள் என நினைத்து, ஐந்து பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, ஒரு இடத்தில் அமர வைத்தனர். அதில், இரண்டு அதிகாரிகள் பதில் பேசாமல் திரும்ப சென்றுவிட்டனர். மூன்று அதிகாரிகளை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், அபராதம் விதிக்கப்பட்ட தொகைக்கான ரசீதை அதிகாரிகளிடமே திரும்பி கொடுத்துவிட்டு, பணத்தை பெற்றுக்கொண்டனர்.தகவலறிந்து வந்த புதுச்சத்திரம் போலீ
சார், அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தனர். இதில், அவர்கள் சுகாதாரத்துறையை சேர்ந்த ஆய்வாளர் மணிகண்டன், சதீஷ்குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகளை மீட்டு போலீசார் அழைத்துச்சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

