/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மஞ்சப்பை விருது' பெற விண்ணப்பிக்க அழைப்பு
/
'மஞ்சப்பை விருது' பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 04, 2025 06:00 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை: 'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், 2022-23ம் நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை, சட்டசபை கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த, 3 பள்ளிகள், 3 கல்லுாரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு, 'மஞ்சப்பை விருது' வழங்கப்படும்.
இந்த விருதிற்கு, முதல் பரிசாக, 10 லட்சம், இரண்டாம் பரிசாக, 5 லட்சம், மூன்றாம் பரிசாக, 3 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும். விருதிற்கான சான்றிதழும் வழங்கப்படும். விண்ணப்ப படிவங்கள், கலெக்டர் அலுவலக இணைய தளத்திலும், தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 2026 ஜன., 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

