/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மினி பஸ் இயக்க நாளைக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
/
மினி பஸ் இயக்க நாளைக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜன 30, 2025 05:05 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: மினி பஸ்களுக்-கான புதிய விரிவான திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, அதிக குடியிருப்புகளை கொண்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு, எந்த பாதையும் இணைக்கப்ப-டாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் உடனடி-யாக அமலுக்கு வருகிறது. மேலும், தமிழகத்தில் மினி பஸ்களுக்-கான கட்டண திருத்தம் வரும், மே, 1 முதல் நடைமுறைக்கு வரு-கிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம், 25 கி.மீ., இருக்க வேண்டும். குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம், சாலையின் மொத்த நீளத்தில், 65 சதவீதத்துக்கு குறைவாக இருக்கக் கூடாது. தொடக்கம் மற்றும் முடியும் இடம் சேவை செய்யப்படாத கிராமத்தில் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று பஸ் ஸ்டாப் அல்லது பஸ் ஸ்டாண்டாக இருக்க வேண்டும்.துவங்கும் இடத்தில் இருந்து, அடுத்த ஒரு கி.மீ., துாரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லுாரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ் பெற்ற வழி-பாட்டு தலங்கள் அல்லது பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் போன்றவை, மேற்கூறிய தேவைப்-படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில், சேவை பகுதியில், ஒரு கி.மீ., வரை கூடுதல் துாரத்தை அனுமதிக்கலாம்.பழைய மினி பஸ் திட்டத்தின் கீழ் ஏற்கனவே, 'பர்மிட்' பெற்ற பஸ் உரிமையாளர்கள், இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக அளித்து பர்மிட்டை ஒப்ப-டைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில், குறைந்தபட்சம், 1.5 கி.மீ., கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.
மினி பஸ்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருக்கை தவிர்த்து, பயணிகள் இருக்கை, 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பஸ்சின் வீல்பேஸ், 390 செ.மீ-., மிகாமல் இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், இந்த புதிய விரிவான திட்டத்தின் கீழ், மினி பஸ்கள் இயக்குவதற்கு, வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை, பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள், அந்தந்த ஆர்.டி.ஓ., அலுவலரிடம், நாளைக்குள் (ஜன., 31) சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.