/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் படை வீரர்கள் மானிய கடன் பெற அழைப்பு
/
முன்னாள் படை வீரர்கள் மானிய கடன் பெற அழைப்பு
ADDED : செப் 24, 2024 01:28 AM
நாமக்கல்: 'முன்னாள் படைவீரர்களுக்கு, மானியத்துடன் கடன் வழங்கப்-படும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் படைவீரர்கள், படை பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் விதவையர்களுள் தொழில் தொடங்குவோருக்கு, 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் வரை, வங்கிகள் மூலம் கடன் பெற்றுத்தர மாநில அரசு திட்டமிட்-டுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்-கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம், மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், திறன் மற்றும் தொழில் முனைவோர்
மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் என, தெரிவிக்-கப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தில் தொழில் தொடங்க விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படை பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்-பெண்கள் அக்., 10க்குள், நாமக்கல் மாவட்ட
முன்னாள் படை-வீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை வழங்கி பயன்பெ-றலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.