sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

/

ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : டிச 29, 2025 07:20 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, வாழை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றுக்கு, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்-டத்தின் கீழ் ரபி பருவத்திற்கான பதிவு நடக்கிறது

. இதுகுறித்து, நாமக்கல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஷ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மரவள்ளி பயிரிட்டுள்ள விவசாயிகள், ஏக்கருக்கு பிரிமியம் தொகையாக, 530.30 ரூபாய் செலுத்தி இழப்பீடாக, 26,515 ரூபாய் பெறலாம். வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு, 1,917.50 ரூபாய் பிரிமியம் செலுத்தி, 38,350 இழப்பீடாகவும், வெங்-காயம் பயிரிடுவோர் ஏக்கருக்கு, 2,112.50 செலுத்தி, 42,250 ரூபாய் இழப்பீடாகவும் பெற முடியும். தக்காளி விவசாயிகள் ஏக்கருக்கு, 1,862.50 ரூபாய் செலுத்தி, 37,250 இழப்பீடாக பெறலாம்.

விவசாயிகள் இப்பிரிமியம் தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்-கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். இதற்கு நிலத்தீர்வை ரசீது, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவை அவசிய-மாகும். மரவள்ளி மற்றும் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும் பிப்., 28 கடைசி நாளாகும். வெங்காயம் மற்றும் தக்காளி பயிர்களுக்கு, வரும் ஜன., 31 கடைசி நாளாகும். எனவே விவ-சாயிகள் அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்-துள்ளார்.






      Dinamalar
      Follow us