/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3ல் நடராஜமூர்த்திக்கு திருக்கல்யாண உற்சவம்
/
3ல் நடராஜமூர்த்திக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED : டிச 29, 2025 07:19 AM
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் உள்ள திருஞா-னசம்பந்தர் மடாலயத்தில், வரும், 3ல், 110ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முன்னதாக, 2 காலை, 8:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவை திருமுறை பாரா-யணம் நடக்கிறது. 3 காலை, 9:00 மணிக்கு சிவ-காம சுந்தரி உடனமர் நடராஜர் சுவாமி திருக்கல்-யாணம் உற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, காலை, 11:00 மணிக்கு ஆயிரத்-துக்கு மேற்பட்ட தேங்காய்களை கொண்டு சிவ-லிங்கம் அமைத்து நாரிகேள ருத்ர சிவலிங்கம் தரிசனம் நடக்கிறது.
இதை காண சுற்று வட்டாரத்தை சேர்ந்த நாமக்கல், கரூர், மோகனுார் பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு, பிரசாதமாக தேங்காய்-களை பெற்று செல்வது வழக்கம். தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு மங்கள இசை, கைலாய வாத்திய முழங்க நடராஜர் திருவீதி உலா நடக்கிறது.
மாலை, 4:00 மணிக்கு திருஊஞ்சல் சேவையுடன் விழா நிறைவடைகிறது.

