/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விஜயகாந்த் நினைவு நாள் தே.மு.தி.க.,வினர் மரியாதை
/
விஜயகாந்த் நினைவு நாள் தே.மு.தி.க.,வினர் மரியாதை
ADDED : டிச 29, 2025 07:18 AM
குமாரபாளையம்: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவு நாளையொட்டி, குமாரபாளையம் தே.மு.தி.க., சார்பில், நகர செயலர் நாராயண-சாமி தலைமையில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஆனங்கூர் பிரிவு சாலையில் துவங்கிய மவுன ஊர்வலம், பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் நிறைவடைந்தது. பள்ளிப்பா-ளையம் பிரிவு சாலை பகுதியில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மரி-யாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமாரபாளையம் நகரில் உள்ள, 33 வார்டுகளில், விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அனைத்து பகுதியில் அன்ன-தானம் வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ர-மணி, நாகராஜ், அவைத்தலைவர் ரவிக்குமார், நகர பொருளாளர் செல்வகுமார், நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்-கேற்றனர்.

